சென்னை: தமிழகத்திற்கு புயல் நிவாரணம் வழங்குவதில் ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்கள் பாராமுகம் காட்டி வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்களும் நிவாரண உதவி அளிக்கலாம் என்று தமிழக அரசு விளம்பரம் வெளியிட்ட பிறகுதான் மத்திய அரசு வெட்கப்பட்டு நிவாரணை உதவியை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறுகையில், 'தானே புயல் தாக்கிய உடனே மாநில அரசு ரூ 850 கோடியை நிவாரணத்துக்காக ஒதுக்கியது. நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில் மத்திய அரசை அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது. சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்கள் பாராமுகம் காட்டி வந்தனர்.
பொதுமக்களும் நிவாரண உதவி அளிக்கலாம் என்று மாநில அரசு சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட பின்னர்தான் மத்திய அரசு வெட்கப்பட்டு நிவாரண நிதியாக ரூ 500 கோடியை வழங்கியது.' என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app




