maniyosai.com

You are here: Home செய்திகள் ஊட்டியில் இருப்பவர்களுக்கு வேலை வெட்டி இல்லையா? - பத்திரிகைகளுக்கு ஜெ. பதிலடி

ஊட்டியில் இருப்பவர்களுக்கு வேலை வெட்டி இல்லையா? - பத்திரிகைகளுக்கு ஜெ. பதிலடி

E-mail Print
Share/Save/Bookmark

Jayalalithaசென்னை: தான் கொடநாடு செல்லும் போதெல்லாம் ஓய்வெடுக்க செல்வதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. கொடநாடு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. ஊட்டியில் இருப்பவர்களெல்லாம், வேலை வெட்டி எதுவுமின்றி எப்பொழுதும் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளனர் என்று அர்த்தம் ஆகுமா என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா வினவியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 14) வெளியிட்டுள்ள அறிக்கை:


நான் கொடநாடு சென்றாலே, “ஒய்வெடுக்க செல்கிறேன்” என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கொடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கொடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்தையில் கூறியுள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 14 June 2010 13:50 )  


More and More


கிட்டதட்ட

03 April 2012, 12.53 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் குறைப்பு
சென்னை: தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப் பட்ட வீடுகளுக்கான மின்...மேலும்...
0 Comments , 102 Hits
13 February 2012, 21.05 தலைப்புச் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
ஸ்ரீரங்கம் : பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முதல்வர்...மேலும்...
0 Comments , 186 Hits
30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 57 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits