maniyosai.com

You are here: Home செய்திகள் மக்கள் சேவை ஆற்ற ஜெயலலிதா மீண்டும் கொடநாடு பயணம்

மக்கள் சேவை ஆற்ற ஜெயலலிதா மீண்டும் கொடநாடு பயணம்

E-mail Print
Share/Save/Bookmark

Jayalalithaசென்னை : மக்கள் சேவை ஆற்றுவதற்காக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இன்று (ஆக.31) கொடநாடு செல்கிறார்.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் இருக்கும் பங்களாவுக்கு அடிக்கடி செல்வது ஜெயலலிதாவின் வழக்கம். அவர் ஒவ்வொரு முறை கொடநாடு செல்லும் போதும், ஜெயலலிதா ஓய்வெடுக்க கொடநாடு செல்வதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன. கொடநாடு சென்றாலும் தான் மக்கள் சேவையையே ஆற்றுவதாகவும் ஓய்வெடுக்க செல்லவில்லை எனவும் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் சேவை ஆற்ற ஜெயலலிதா இன்று (ஆக.31) மீண்டும் கொடநாடு செல்கிறார். சென்னையிலிருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு கோவை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு சென்றடைகிறார். கொடநாட்டில் தங்கி சட்டமன்ற தேர்தல் வியூகங்களை ஜெயலலிதா அமைப்பார் என கூறப்படுகிறது.

செப். 3ம் தேதி நடக்கவிருக்கும் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 18.29 செய்திகள்
ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக...மேலும்...
0 Comments , 248 Hits
13 February 2012, 21.05 தலைப்புச் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
ஸ்ரீரங்கம் : பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முதல்வர்...மேலும்...
0 Comments , 186 Hits
05 March 2012, 20.18 தலைப்புச் செய்திகள்
சங்கரன்கோவில் மார்ச் 14ம் தேதி ஜெயலலிதா பிரசாரம்
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக...மேலும்...
0 Comments , 203 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits