maniyosai.com

You are here: Home செய்திகள் சென்னை வர வேண்டிய விமானத்தில் திடீர் புகை - அவசரமாக தரை இறங்கியது

சென்னை வர வேண்டிய விமானத்தில் திடீர் புகை - அவசரமாக தரை இறங்கியது

E-mail Print
Share/Save/Bookmark

jet airwaysமும்பை: மும்பையில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு (ஆக.27) புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் என்ஜினிலிருந்து திடீரென புகை கிளம்பியதால், அந்த விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நேற்றிரவு (ஆக.27) 9 மணிக்கு மும்பையில் இருந்து சென்னைக்கு 9W-2302 ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில், 139 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்டு சில நொடிகளிலேயே விமானத்தின் இடது எஞினில் இருந்து புகை வருவதை சில பயணிகள் கவனித்தனர். உடனடியாக, விமானிக்கு தகவல் அளிக்கப் பட்டது. விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். விமானம் பத்திரமாக தரையிறக்கப் பட்டது.

விமானத்தில் இருந்து பயணிகள் இறங்க ‘நகரும் படிக்கட்டு’ தயார் நிலையில் இருந்தது. படிக்கட்டு பொருத்தப் படுவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று கருதிய சில பயணிகள், விமானத்தில் இருந்து கீழே குதிக்க முற்பட்டனர். இதில் 25 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதில், எலும்பு முறிவு ஏற்பட்ட 2 பயணிகள் தனியார் மருத்துவமனையிலும், 10 பயணிகள் நானாவதி மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். காயமடைந்த மற்ற பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவர் குழு முதலுதவி அளித்தது.

அவசரமாக தரையிறக்கப் பட்ட விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனை செய்தனர். ஆனால், என்ஜினில் புகை வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

பின்னர், மற்றொரு விமானம் மூலம் 117 பயணிகள் மும்பையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

30 December 2011, 11.40 தலைப்புச் செய்திகள்
புதுவை அருகே கரையைக் கடந்தது தானே புயல்
புதுச்சேரி அருகே தானே புயல் இன்று காலை 7 மணியளவில் கரையைக் கடந்தது....மேலும்...
0 Comments , 184 Hits
20 February 2012, 12.33 செய்திகள்
சென்னையில் கடும் பனிமூட்டம் : மக்கள் பீதி
சென்னை: இன்று (பிப்.20) காலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்...மேலும்...
0 Comments , 122 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits