புதுதில்லி: இந்தியாவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள் பற்றி முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து தேச விரோதமானது என காமன்வெல்த் போட்டிகளின் ஏற்பாடு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் வெற்றி அடைந்தால் தான் வருத்தப் படப் போவதாகவும், அப்போட்டிகளை துர்சக்திகள் மட்டுமே ஆதரிக்கும் எனவும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் இன்று (ஜூலை 27) கருத்து தெரிவித்திருந்தார்.
மணிசங்கர் அய்யரின் இந்த கருத்துக்கு காமன்வெல்த் போட்டிகளின் ஏற்பாடு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,”விளையாட்டு துறையை தன் வசம் வைத்திருந்த ஒரு மூத்த அமைச்சரிடமிருந்து இத்தகைய பொறுப்பற்ற பேச்சை எதிர்பார்க்கவில்லை. உண்மையான இந்திய பிரஜையால் இப்படி பேச முடியாது.மணிசங்கர் அய்யர் தன் பொறுப்பை உணர்ந்து நன்கு யோசித்து கருத்து தெரிவிக்க வேண்டும்.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app



