maniyosai.com

You are here: Home செய்திகள் புதுதில்லியில் கமலஹாசன் திரைப்பட விழா

புதுதில்லியில் கமலஹாசன் திரைப்பட விழா

E-mail Print
Share/Save/Bookmark

kamalhassan புதுதில்லி: பத்மஸ்ரீ கமலஹாசன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் ’கமலஹாசன் திரைப்பட விழா’ ஜூலை 2ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தில்லியில் கொண்டாடப் பட இருக்கிறது.

1960ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். குழந்தை பருவம் முடிந்து இளைஞன் ஆன பிறகு இவர் சில காலம் நடன இயக்குனராக இருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி ஆகிய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடனங்களை அமைத்துள்ளார் கமலஹாசன். அபூர்வ ராகங்கள் படம் நடிகராக கமலஹாசனுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. பின்னர், மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987), தேவர் மகன் (1992), மகாநதி (1993) போன்ற தரமான படங்களில் நடித்து இந்திய அளவில் ஒரு சிறந்த நடிகர் என்ற மதிப்பை பெற்றார் கமலஹாசன். இவர் அண்மையில் நடித்த அன்பே சிவம், தசாவதாரம் ஆகிய படங்களும் கமலுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன.

56 வயதான கமலஹாசன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இதனைக் கொண்டாடும் வகையில் கமலஹாசன் திரைவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஜூலை 2 முதல் நடக்கும் இந்த 3 நாள் நிகழ்ச்சியை, தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திரை விழாவில், கமலஹாசன் நடித்த ’ஹே ராம்’ (இந்தி பதிப்பு) , ‘அன்பே சிவம்’ , ‘விருமாண்டி’ , ‘தேவர் மகன்’ , ‘நாயகன்’ , ‘தசாவதாரம்’ , ‘சாகர சங்கமம்’ (தெலுங்கு - தமிழில் சலங்கை ஒலி) ஆகிய படங்கள் திரையிடப் படவுள்ளன.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 26 June 2010 19:43 )  


More and More


கிட்டதட்ட

20 February 2012, 10.18 சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்
சென்னை: பழம்பெரும் குணச்சித்திர நடிகை எஸ்.என்.லட்சுமி உடல்நலக்...மேலும்...
0 Comments , 137 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits