புதுதில்லி: சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்திடம் மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் கபில் சிபல் இன்று (ஆக.24) மன்னிப்பு கோரினார்.
சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஸ்பெயினில் தங்கி வருகிறார். இந்நிலையில், விஸ்வநாத் ஆனந்துக்கு ஐதரபாத் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்துள்ளது.
விஸ்வநாதன் ஆனந்தின் இந்திய குடியுரிமை பற்ற மனித வள மேம்பாட்டு துறை கேள்வி எழுப்பியதால், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப் படுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து விஸ்வநாத் ஆனந்தை, இன்று (ஆக.24) தொலைபேசியில் அழைத்து மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் கபில் சிபல் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “ஆனந்தின் இந்திய குடியுரிமை பற்றி மனிதவள மேம்பாடு துறை எந்த கேள்வியும் எழுப்பவில்லை. கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று மாலையே வைத்துக் கொள்ளலாம் என ஆனந்திடம் தெரிவித்தேன். இன்று மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என அவர் கூறினார். தங்களுக்கு சவுகரியமான தினத்தில் நிகழ்ச்சியை வைத்து கொள்ளலாம் என நான் கூறினேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.” எனக் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app



