சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் செய்யப் பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி சட்டமன்றத்தில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விஜயகாந்த் கையை நீட்டி, நாக்கை மடக்கி மிரட்டுவது போல் நடந்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் அவை நடவடிக்கைகளில் இருந்து பத்து நாட்களுக்கு இடைக்கால பதவிநீக்கம் செய்யப் படுவதாக சபாநாயகர் ஜெயக்குமார் பிப்ரவரி 2 அன்று அறிவித்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் செய்யப் பட்டிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, 'அதிமுக ஆட்சியில் ஜனநாயக விரோத செயல்கள் நடந்து வருகிறது. விஜயகாந்த்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதற்கு ஆதாரமாக திகழ்கிறது.' என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app





