சென்னை: கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்கை முதலமைச்சர் கருணாநிதி இன்று (24/07/2010) ஏற்றி வைத்தார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி அன்று முதல்வர் கருணாநிதி காமராஜரின் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதை முன்னிட்டு பல லட்ச ரூபாய் செலவில் காஸ் மூலம் இயங்கும் அணையா விளக்கு பொருத்தும் பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டது.
இதை, முதல்வர் கருணாநிதி இன்று (24/07/2010) ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் குமரி அனந்தன் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Want to write for Maniyosai?
Download our android app




