மதுரை: கோவில்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் இன்று (பிப்.5) திடீரென மத்திய அமைச்சரும், முதல்வரின் மகனுமான மு.க.அழகிரி யை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இவரும் விரைவில் திமுகவுக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது.
அண்மை காலமாக, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் திமுகவுக்கு ஆதரவாக செயல் பட்டதால், அவரை அதிமுக தலைமை, கட்சியில் இருந்து நீக்கியது. இருப்பினும், அவர் இன்னும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதே போல், அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அவர் திமுகவுக்கு சென்ற கையோடு திருச்செந்தூர் இடைத்தேர்தலில் நின்று திமுக எம்.எல்.ஏ. ஆகி விட்டார்.
இந்நிலையில், கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் (அனிதா ராதாகிருஷ்ணன் அல்ல) மு.க. அழகிரியை சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி பிரச்சினைகள் தொடர்பாகவே நான் அழகிரியை சந்தித்து மனு கொடுத்தேன்.
சட்டசபையில் தொகுதிப் பிரச்சினை தொடர்பாக பேச கட்சித் தலைமை அனுமதிப்பதில்லை. இதனால்தான் அமைச்சர் அழகிரியை சந்தித்து மனு கொடுத்தேன் என்றார்.
இது குறித்து அழகிரி கூறுகையில், கட்சி பாகுபாடின்றி திமுக, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. இந்த மனுவையும் முதல்வரிடம் அனுப்பி வைப்பேன் என்றார்.
ஜெ. ரியாக்ஷன்:
இதற்கிடையே, ராதாகிருஷ்ணனை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app






admk should learn to respect those who are loyal to the party.