maniyosai.com

You are here: Home செய்திகள் இமாம்களுக்கு மத்திய அரசு ஊதியம் கொடுக்க வேண்டும்: லாலு கோரிக்கை

இமாம்களுக்கு மத்திய அரசு ஊதியம் கொடுக்க வேண்டும்: லாலு கோரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

jama masjidபுதுதில்லி: அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை, மக்களவையில்,ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


பின்னர், செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய லாலு, “காங்கிரஸ் வாக்கு அரசியலை நடத்தி வருகிறது. சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டும் காங்கிரஸுக்கு தேவை. ஆனால், சிறுபான்மையினரின் நலனுக்கு காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை.

அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுப்பது பற்றி 6 மாத காலத்திற்குள் சட்டம் இயற்றப் பட வேண்டும் என 1993ம் ஆண்டே உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 17 ஆண்டுகள் ஆகியும் இதைப் பற்றி மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை.” எனக் கூறினார்.

காங். பதிலடி:

லாலுவின் இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில்,

”தேர்தல் நெருங்கி விட்டதால் இமாம்களின் சம்பள பிரச்சினையை லாலு கையில் எடுத்துள்ளார். லாலு மீது எங்களுக்கு மதிப்பு உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அவர் அமைச்சராக இருந்த போது ஏன் இந்த பிரச்சினையை அவர் எழுப்பவில்லை.”என்றார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 21 August 2010 17:40 )  


More and More


கிட்டதட்ட

19 January 2012, 20.47 செய்திகள்
காங்கிரஸை தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் : நிதின் கத்காரி
மெகபூப்நகர்: காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்தால்தான் நாடு...மேலும்...
0 Comments , 87 Hits
19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 63 Hits
16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 173 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits