maniyosai.com

You are here: Home செய்திகள் கெளரவ கொலைகளை தடுக்க விரைவில் கடுமையான சட்டம் - சிதம்பரம் தகவல்

கெளரவ கொலைகளை தடுக்க விரைவில் கடுமையான சட்டம் - சிதம்பரம் தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

chidambaramபுதுதில்லி: கெளரவ கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு அமல் படுத்த உள்ளதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இனத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு பெண் அரைகுறை ஆடைகள் அணிந்தாலோ, காதல் திருமணம் செய்ய எண்ணினாலோ, யாருடனாவது தகாத உறவு கொண்டிருந்தாலோ, ஒரு பெண்ணை, ஊரில் இருக்கும் ஆண்கள் பலர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்யும் வழக்கம் அண்மை காலத்தில் அதிகரித்துள்ளது. இதை கெளரவ கொலை என்று அழைக்கிறார்கள். இவ்வாறாக நடக்கும் கெளரவ கொலைகளை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினை குறித்து எழுப்பப் பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் இன்று (ஆக.5) நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது:

“கெளரவ கொலைகளை தடுக்க பிரத்தியேக சட்டம் தற்போது இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின் படியே தண்டனை அளிக்க முடியும்.

கெளரவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல் படுத்தப் போகிறது. இதற்கான, சட்ட முன் வரைவு மசோதாவை தயாரிக்க, மந்திரி சபையின் ஒப்புதலைப் பெற்று, அமைச்சர் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப் படும்.

கெளரவ கொலைகளை நிகழ்த்துவோருக்கு கடுமையான தண்டனை அளிப்பதோடு, பொது இடத்தில் பெண்களை நிர்வாணப் படுத்தி சித்திரவதை செய்வது போன்ற கொடூரங்களையும் தடுக்கவும் இந்த புதிய சட்டம் உதவும்.

கெளரவ கொலைகளை தடுக்க மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 20.54 செய்திகள்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தன் கணக்கை...மேலும்...
0 Comments , 125 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 120 Hits
13 March 2012, 19.03 செய்திகள்
உத்தரகாண்டில் விஜய் பகுகுணா முதல்வராக பதவியேற்பு
தேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்...மேலும்...
0 Comments , 121 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits