maniyosai.com

You are here: Home செய்திகள் லாரி ஸ்டிரைக் - லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

லாரி ஸ்டிரைக் - லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

lorry strikeபுதுடெல்லி: டீசல் விலையுயர்வைக் கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தென் மாநிலங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரித்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்துக் கொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வேடிக்கைப் பார்ப்பது அவர்களின் முக்கிய பொழுதுப்போக்குகளில் ஒன்றாகி விட்டது. தற்போது கடந்த ஜூன் மாதம் மீண்டும் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதோடு தோன்றும்போதெல்லாம் விலையுயர்ந்திக் கொள்ளும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார்.

இதன் விளைவாக எதிர்கட்சிகளும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறது. கடந்த ஜூலை 5ம் தேதி இந்த விலையுயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் பந்த் நடத்தியது. யார் என்ன போராட்டம் நடத்தினாலும் பெட்ரோல் டீசல் விலைக் குறைக்கப்படமாட்டாது என பிரணாப் முகர்ஜி மிக ஆணவமாக கொக்கரித்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடத்தப் போவதாக தென்மாநிலங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டீசல் விலையை குறைக்காவிட்டால் இந்தப் போராட்டத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பும் சேரும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits