maniyosai.com

You are here: Home செய்திகள் செருப்பு விளம்பரத்தில் மம்தா பானர்ஜி?

செருப்பு விளம்பரத்தில் மம்தா பானர்ஜி?

E-mail Print
Share/Save/Bookmark

mamta bannerjeeபுதுதில்லி: தன் அனுமதி இல்லாமல் செருப்பு விளம்பரத்திற்கு தன் புகைப்படத்தை உபயோகித்த காலணி தயாரிப்பு நிறுவனம் மீது ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

ஜூன் 21 தேதியிட்ட சம்பத் பிரதி தின் என்ற வங்காள மொழி நாளிதழில், அஜந்தா காலணி நிறுவனம் ஒரு முழு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அதில், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அஜந்தா நிறுவனத்தின் ரப்பர் காலணிகளையே மம்தா பானர்ஜி பயன் படுத்துவதாக அதில் விளம்பரப் படுத்தப் பட்டிருந்தது.

இந்த விளம்பரம் மம்தா பானர்ஜியின் அனுமதியின்றி வெளியிடப் பட்டுள்ளதாக, அஜந்தா காலணி தயாரிப்பு நிறுவனம் மீது மம்தா பானர்ஜி சார்பில் ரயில்வே துறை, நாடாளுமன்ற தெரு காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

”ரயில்வே அமைச்சரின் அனுமதி இல்லாமல், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் விளம்பரம் செய்யப் பட்டுள்ளது. அதை பார்த்து ரயில்வெ அமைச்சர் மிகவும் வேதனை அடைந்தார்.” என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

02 January 2012, 20.07 தலைப்புச் செய்திகள்
பரபரப்புக்காக செய்திகள் எழுத வேண்டாம்: ஊடகங்களுக்கு பிரதமர் அறிவுரை
புதுதில்லி: பரபரப்புக்காக மிகைப் படுத்தப் பட்ட செய்திகளை எழுத...மேலும்...
0 Comments , 129 Hits
22 January 2012, 21.45 சம்பவம்
கோல்கத்தாவில் தீ விபத்து : 100 குடிசைகள் எரிந்து நாசம்
கோல்கத்தா : கோல்கத்தாவின் காளியாகாபூர் பகுதியில் உள்ள சேரியில்...மேலும்...
0 Comments , 90 Hits
19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits