புதுடில்லி : ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே பட்ஜெட் தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ரயில்வே துறை பணிகளில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
தனியார் நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் 2020க்கள் எதையும் சாதித்து விட முடியாது.
புதிய ரயில்பாதைகள் அமைப்பது, சரக்கு ரயில்கள், சரக்கு பெட்டிகள், உலகத்தரம் வாய்ந்த ரயில்நிலையங்கள் அமைத்தல், பயணிகள் வசதி உள்ளிட்ட அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் முதலீடு அவசியம். இது நாட்டின் வளர்ச்சியையும், லாபத்தையும் அதிகரிக்கும்.
இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



