maniyosai.com

You are here: Home செய்திகள் கருணாநிதிக்கு மன்மோகன் சிங் கடிதம்

கருணாநிதிக்கு மன்மோகன் சிங் கடிதம்

E-mail Print
Share/Save/Bookmark

karunanidhiசென்னை: ஈழத் தமிழர்களுக்கு  அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளதாக, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் .

இலங்கை தமிழர்கள் தொடர்பாக, மன்மோகன் சிங்குக்கு சில நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப் பட்டிருப்பதாவது:

"இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக, இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் முகாம்களில் உள்ள 47 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.

ராஜபக்சேவிடம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், இலங்கையில் வாழும் சிறுபான்மையினர், குறிப்பாக, தமிழர்கள் கெளரவத்துடன் வாழவும் வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு கருணாநிதிக்கு எழுதியுள்ள, ஜூன் 10ம் தேதியிட்ட கடிதத்தில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits
03 March 2012, 19.55 தலைப்புச் செய்திகள்
இலங்கைக்கு இந்தியா ஆதரவு : வைகோ கண்டனம்
சென்னை: ஐ.நா., மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அப்பாவி தமிழர்களைக்...மேலும்...
0 Comments , 197 Hits
02 January 2012, 20.07 தலைப்புச் செய்திகள்
பரபரப்புக்காக செய்திகள் எழுத வேண்டாம்: ஊடகங்களுக்கு பிரதமர் அறிவுரை
புதுதில்லி: பரபரப்புக்காக மிகைப் படுத்தப் பட்ட செய்திகளை எழுத...மேலும்...
0 Comments , 129 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits