maniyosai.com

You are here: Home செய்திகள் பிரதமர் பதவியை நிராகரித்தவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி புகழாரம்

பிரதமர் பதவியை நிராகரித்தவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி புகழாரம்

E-mail Print
Share/Save/Bookmark

moopanarகும்பகோணம்: பிரதமர் பதவி தேடி வந்தும் வேண்டாம் என நிராகரித்தவர் ஜி.கே.மூப்பனார் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மறைந்த ஜி.கே.மூப்பனாரின் முழு உருவ சிலையை திறந்து வைக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (ஜூலை 3) வந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

“1997ம் ஆண்டு தேவ கவுடா அரசு கவிழ்ந்த பின் ஜி.கே.மூப்பனாருக்கு பிரதமர் பதவி வழங்கப் படுவதாக இருந்தது. பிரதமர் பதவி தேடி வந்தும் அதனை நிராகரித்த மாமனிதர் மூப்பனார். ஜி.கே.மூப்பனார் கடைசி வரை மக்களோடு மக்களாக இருந்தார். அவர் எந்த பதவியையும் விரும்பியதில்லை.

பிரதமர் பதவி தேடி வந்தும் அதனை நிராகரித்தவர்கள் மூன்று பேர். அவர்கள் காமராஜர், மூப்பனார் மற்றும் சோனியா காந்தி ஆவார்கள். இத்தகைய தியாக உள்ளத்திற்கும் மனித பண்பிற்கும் நான் தலை வணங்குகிறேன்.

மூப்பனாரை 40 ஆண்டுகளாக நான் அறிவேன். காந்திய கொள்கைகளை கடைப்பிடித்த அதிசய அரசியல்வாதி மூப்பனார். அவர் வாழ்க்கைமுறை எளிமையாக இருந்தாலும் சிந்தனை வலிமையாக இருந்தது. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக செலவிட்டார்.” இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
28 April 2012, 12.55 செய்திகள்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : திமுக நிலைப்பாடு குறித்து மே 17 அறிவிப்பு - கருணாநிதி
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மே 17ம்...மேலும்...
0 Comments , 32 Hits
29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 60 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits