புதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் அதிகரிக்கப் பட்டு ரூ.60,000 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படை சம்பளமாக ரூ.16,000 பெற்று வந்தனர். கூட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ரூ.80,000 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ரூ.50,000 ஆக உயர்த்த கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
சம்பள விவகாரத்தில் முரண்டு பிடித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று (ஆக.22) மத்திய நிதியமைச்சர் சந்தித்து பேசினார்.அவர்களின் ஆதங்கத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என அப்போது பிரணாப் முகர்ஜி உறுதியளித்தார்.
இந்நிலையில், ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்த ஊதியத்தை, ரூ.60,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (ஆக.23) ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவுகளுக்கான தொகையில் ஐந்தாயிரம் ரூபாயும், தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐந்தாயிரம் ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கான மசோதா இந்த வாரமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Want to write for Maniyosai?
Download our android app




