நியுயார்க்: உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 4வது இடத்தில் முகேஷ் அம்பானியும், 5வது இடத்தில் லட்சுமி மிட்டலும் இடம்பெற்றுள்ளனர். நியூயார்க்கில் உள்ள போர்பஸ் பத்திரிகை 2010 ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் மெக்ஸிகோவை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் ஹெலு என்பவர் 53.5 பில்லியன் டாலர்களுடன் உலகிலேயே முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இவ்வரிசையில் 29பில்லியன் டாலர் சொத்துக் கொண்ட இந்திய தொழிலதிபர் 4வது இடத்தில் உள்ளார். இவரது தம்பி அனில் அம்பானி பெருத்த நஷ்டமடைந்திருப்பதால் இந்த பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு 36வது இடத்தில் இருக்கிறார்.
மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியரான இரும்பு நிறுவனங்களின் அதிபர் லட்சுமி மிட்டல் 5வது பணக்காரர். இவரது சொத்து மதிப்பு 28.7 பில்லியன் டாலர்கள்.
சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கு முன் கோடீஸ்வர பட்டியலில் இருந்த பலர் இப்பொழுது காணாமல் போயிருக்கின்றனர். அதனால் டாப்பில் இருந்த இந்தியாவில் இருந்து இப்பொழுது இரண்டே பேர்தான் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த வகையில் சீனாவின் நிலை சற்று உயர்ந்துள்ளது. பாகிஸ்தானும் பின்லாந்தும் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளன.
Want to write for Maniyosai?
Download our android app



