காத்மாண்டு: நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை (ஆக.24) மலை மீது மோதி நொறுங்கியதால் 14 பேர் பலி ஆகியுள்ளனர்.
கிழக்கு நேபாளத்தில் உள்ள லுக்லா என்ற மலை பகுதிக்கு செல்ல காத்மாண்டுவில் இருந்து அக்னி ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானம் இன்று காலை (ஆக.24) புறப்பட்டது.
இதில் 3 விமான ஊழியர்களையும் சேர்த்து 14 பேர் பயணம் செய்தனர். அதில் 6 பேர் வெளிநாட்டு பயணிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே மோசமான வானிலை காரணமாக ஷிகார்பூர் கிராமத்துக்கு அருகே விமானம் மலை மீது மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 14 பேரும் இறந்திருக்க கூடும் என அஞ்சப் படுகிறது.
கன மழை காரணமாக அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சம்பவ இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




