திருநெல்வேலி : சிவராத்திரிக்கு அரசு விடுமுறை விடவேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்துமுன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்து கோயில்களின் சொத்துக்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்க யாரும் முன்வரவில்லை. எனவே இந்து கோயில் சொத்துக்களை மீட்க முயற்சிப்போம். எனவே கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது சாபமிடும் வகையில் சிவராத்திரி தினத்தன்று கோயில்கள் முன்பிருந்து மண்ணை தூற்றும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
சிவராத்திரி இந்துக்களுக்கு மிக முக்கிய தினமாகும். அன்று தமிழக அரசு விடுமுறை அறிவிக்கவேண்டும். அறநிலையத்துறைக்கு பதிலாக இந்துக்கோயில்களை நிர்வகிக்க சுயமான, சுதந்திரமான நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும். இதில் ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட ஓய்வுபெற்ற
அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்களை நியமிக்கலாம் என்றார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



