மும்பை: மும்பையில் இருந்து துபாய்க்கு 356 பயணிகளுடன் புறப்பட்ட லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானம், மர்ம தொலைபேசி மிரட்டல் காரணமாக, அவசரமாக மும்பைக்கு திரும்பியது.
EK505 லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீவிரவாதி ஒருவன் பயணிப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம தொலைபேசி வந்ததாகவும் , அதனால் மும்பைக்கு அவசரமாக அந்த விமானம் திரும்பியதாகவும், விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று (பிப்.7) காலை 9.59 மணிக்கு கிளம்பிய அந்த விமானம், காலை 10.45 மணியளவில் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விமானம் தரையிறக்கப் பட்டதும், பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதித்தனர்.
இது தொடர்பாக 2 பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



