புதுதில்லி: தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மிக சிறப்பாக செயல் படுவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாடு இன்று (பிப்.7) புதுதில்லியில் நடந்தது.
இதில் பங்கேற்ற மோடி, பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:
”உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக மாநில முதல்வர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு உள்துறை அமைச்சர் நல்ல முறையில் பதில் அளித்தார்.
அண்டை நாடுகளால் தூண்டி விடப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியது மிக அவசியம். மாநிலங்களுக்கு நவீன ஆயுதங்களும், சிறப்பு படைகளும் அளிக்கப் பட வேண்டும்.” இவ்வாறு மோடி கூறினார்.
| < Prev | Next > |
|---|









