You are here: Home செய்திகள் செய்திகள் சரத் பவார் - தாக்ரே சந்திப்பு - காங். விளக்கம்

சரத் பவார் - தாக்ரே சந்திப்பு - காங். விளக்கம்

E-mail Print
User Rating: / 0
PoorBest 

congressபுதுதில்லி: தேசியவாத காங்கிரச் தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார், சிவசேனா தலைவர் பால் தாக்ரேவை சந்தித்துள்ளது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

மும்பை மராத்தியர்களுக்கே விவகாரத்திலும், ஐபிஎல் விவகாரத்திலும் சிவசேனா கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அதே போல்,விவசாயத் துறை அமைச்சராக மத்திய காங். கூட்டணியில் இருக்கும் சரத் பவார் மீது ஆளும் காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ளதாக கூறப் படுகிறது.

அண்மையில், விலைவாசி உயர்வுக்கு பிரதமரும் காரணம் என சரத் பவார் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்ரேவை, தேசியவாத காங். தலைவர் சரத் பவார், நேற்று (பிப்.7) திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:

“சரத் பவார், அமைச்சராகவோ, தேசியவாத காங். தலைவராகவோ, தாக்ரேவை சந்திக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்ற முறையில் சந்தித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசியிருக்கலாம். இதனால், அரசியலில் மாற்றம் நிகழ சாத்தியம் இல்லை.”

ராகுல் - தாக்ரே சண்டையின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதே என நிருபர்கள் கேட்டதற்கு, “இதை அந்த கோணத்தில் பார்க்க கூடாது.” என்றார்.


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 


More and More


Banner

கிட்டதட்ட

04 September 2010, 22.16 செய்திகள்
காமன்வெல்த் போட்டிகள் குறித்த தனது கருத்துக்கு சாய்னா வருத்தம்
ஐதரபாத்: காமன்வெல்த் போட்டிகள் குறித்த தனது சர்ச்சைக்குரிய...மேலும்...
0 Comments , 42 Hits
04 September 2010, 19.27 செய்திகள்
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்: எடியூரப்பா பேட்டி
நாகப்பட்டணம்: கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்...மேலும்...
0 Comments , 25 Hits
03 September 2010, 21.13 செய்திகள்
வாஜ்பாய் அரசு கவிழ நான் காரணமா? - ஜெயலலிதா விளக்கம்
சென்னை: வாஜ்பாய் அரசு 13 நாட்களில் கவிழ தான் காரணம் அல்ல என்று...மேலும்...
0 Comments , 33 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 53 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics