புனே: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான கமலா பக்வத் புனேவில் இன்று (பிப்.8) காலமானார். அவர் வயது 94.
1934ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் கமலா பக்வத். பின்னர் இந்திய கம்யூசிஸ்டு கட்சியில் இணைந்து, தொழிலாளர் வர்க்கத்தினருக்காக அதிகம் போராடினார்.
சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திலும், கோவா யூனியன் பிரதேசம் உருவாக்கியதிலும் கமலா பக்வத்தின் பணி அதிகம்.
மறைந்த கமலா பக்வத்தின் உடலுக்கு கம்யூ. தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த ஜோதிபாசு போலவே, இவரும் தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கியுள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



