maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ரத்தோர் வழக்கு ஒத்திவைப்பு.

ரத்தோர் வழக்கு ஒத்திவைப்பு.

E-mail Print
Share/Save/Bookmark

சண்டிகர்: இளம் விளையாட்டு வீராங்கனை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ரத்தோருக்கு இன்று கத்தி குத்து விழுந்ததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை மானபங்கப்படுத்தி அவரதுக் குடும்பத்தாருக்கும் தொடர்ந்துத் தொல்லைக் கொடுத்து வந்ததால், அவமானம் தாங்காமல் ருச்சிகா மூன்றாண்டுகளுக்கு பின் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரத்தோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த தண்டனைப் போதாதென ருசிகாவின் தோழியும், பொது மக்களும் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த புது வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, சண்டிகார்‌ கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ரத்தோர். மேலும் சில வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டியும் மனுத் தாக்கல். இந்த மனுமீதான விசாரணை இன்று (08/02/2010) நடக்கவிருந்தது.

அப்பொழுது உணவு இடைவேளையின் போது கோர்ட்டுக்கு வந்த ரத்தோர் காரிலிருந்து இறங்கி கோர்ட்டுக்கு செல்லும் வழியில் ஒரு இளைஞன் திடீரென அவர் மீதுப் பாய்ந்து கத்தியால் குத்தினான். இதனால் கோர்ட் வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உணவு இடைவேளை முடிந்ததும் கத்திக்குத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ரத்தோர் கட்டுகளுடன் கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் இந்த வழக்கு பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.




Want to write for Maniyosai?

Tags:
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits