புதுதில்லி: நோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகளில் ஏதாவது எதிர்பாராத தவறு நிகழ்ந்தால் மருத்துவர்களை இழிவுப் படுத்தி நோகடிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய மருத்துவ கழகத் தலைவர் கேத்தன் தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:
”இதற்காகதான் இவ்வளவு நாட்கள் நாங்கள் போராடி வருகின்றோம். மருத்துவர்கள் பதற்றத்துடன் பணி செய்வதை ஏற்றுக் கொள்ளக் முடியாது.எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்கும் போது அலட்சியமாக இருக்க மாட்டார். அது அவர்களின் தொழில் தர்மத்துக்கு எதிரானதாகும். தனக்கு அவப்பெயர் வரும் என அறிந்தே எந்த மருத்துவராவது தவறான சிகிச்சை அளிப்பார்களா?”
இவ்வாறு கேத்தன் தேசாய் கூறினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



