புதுதில்லி: பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அஃப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் காபுல் நகருக்கு விமானம் ஓட்டி செல்ல முடியாது என ஏர் இந்தியா விமானிகள் தெரிவித்துள்ளனர்.
அஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலை மிகவும் கவலை அளிக்கும் விதமாக இருப்பதால், விமான ஓட்டிகளுக்கு தெளிவான வழிமுறைகளை அரசு அளிக்கும் வரை, விமான ஓட்டிகள் காபுலுக்கு விமானம் ஓட்டி செல்ல மாட்டார்கள் என இந்திய வர்த்தக விமான ஓட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பற்ற இடங்களுக்கு பயணிக்கவில்லை என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமானத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதில் எதுவும் அளிக்க மறுத்து விட்டார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



