மும்பை: கத்தார் நாட்டில் குடியேறியிருக்கும் பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டுமென்றால் அவர் வரைந்த சர்ச்சைக்குரிய இந்து கடவுள்களின் ஓவியங்களை அழித்து விட வேண்டும் என சிவசேனா தலைவர் பால் தாக்ரே தெரிவித்துள்ளார்.
பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் அண்மையில் கத்தார் நாட்டில் குடியேறினார். அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம் என உள்துறை அமைச்சர் நேற்று (மார்ச் 3) கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹுசைன் இந்தியா திரும்ப வேண்டும் என்றால் அவர் வரைந்த சர்ச்சைக்குள்ளான இந்து கடவுள்களின் ஓவியங்களை அழித்து விட வேண்டும் என பால் தாக்ரே கூறியுள்ளார்.
பால் தாக்ரேவுக்கு அடுத்த ‘டாபிக்' கிடைத்து விட்டது போலும்!
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



