சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்தி வரும் உண்ணாநிலை போராட்டத்திற்கு தான் ஆதரவு தெரிவித்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மோடிக்கு தான் நல்லெண்ண அடிப்படையிலேயே ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில், 'மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தை நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத சார்பின்மை குறித்த அதிமுகவின் கொள்கையுடன் ஒருமித்த கருத்தை அவர் கொண்டுள்ளார். அதனால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். இந்த உண்ணாநிலை போராட்டத்தில் குறை சொல்ல ஏதுமில்லை.' என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





