லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ஹர்ட் லாக்கர் என்ற படத்தை இயக்கிய காத்தரீன் பிகெலவ் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். திரைப்பட உலகினர் உயர்ந்ததாகக் கருதும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் நடைப்பெற்று வருகிறது.
இதில் எத்தனையோ பிரிவுகளில் பெண்கள் பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் சிறந்த இயக்குனருக்கான விருதை இது வரையில் எந்த பெண்ணும் பெறவில்லை. இப்பொழுது தி ஹர்ட் லாக்கர் என்ற படத்தை இயக்கிய காத்தரீன் பிகெலவ் முதன்முதலாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்று ஆஸ்கார் விருது பெறும் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



