maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பிரதமரை சந்தித்தற்கு பின்னர்தான் 2ஜி தொடர்பாக வாயைத் திறப்பேன் - பிரணாப் முகர்ஜி

பிரதமரை சந்தித்தற்கு பின்னர்தான் 2ஜி தொடர்பாக வாயைத் திறப்பேன் - பிரணாப் முகர்ஜி

E-mail Print
Share/Save/Bookmark

Pranab Mukherjeeகொல்கத்தா: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்தித்துப் பேசியதற்கு பின்னரே தேவைப்பட்டால் எதையும் கூறுவேன் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (செப்.27) கூறினார். தகவல் பெறும் சட்டத்தின் மூலமாக பெறப்பட்ட நிதியமைச்சகத்தின் குறிப்பு தொடர்பாக, நாளை பிரதமரையும், மற்ற மூத்த அமைச்சரவை சகாக்களையும் சந்தித்தபின்னர் தான் எதுவும் தேவைப்பட்டால் பேசுவேன். நியூயார்க்கிலும் தில்லியிலும் சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கிறேன்" என்று முகர்ஜி இன்று கொல்கத்தாவில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

"பிரதமர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். நிதி அமைச்சகத்தின் குறிப்பு குறித்து பிரதமரை சந்திக்காமல் எதுவுமே கூறமுடியாது. பிரதமர் இன்று (செப்.27) மாலை நாடு திரும்புகிறார். நானும் நாளை மாலை புதுதில்லி செல்கிறேன். எதையாவது நான் சொல்லியே ஆகவேண்டும் என்று இருந்தால் பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்தப் பிறகே என்னால் சொல்லமுடியும்." இவ்வாறு புதுதில்லியிலிருந்து கொல்கத்தா வந்தடைந்த முகர்ஜி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நினைத்திருந்தால் தொலைத்தொடர்புத் துறையிடம் ஏலமுறையை பின்பற்றுமாறு வலியுறுத்தி இருக்கலாம் என்று நிதி அமைச்சகம் மார்ச் 25 அன்று பிரதமருக்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தது. அந்த குறிப்பு வெளியாகி அது எழுப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, 5 நாள் விஜயமாக நியூயார்க் சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி புதுதில்லி திரும்பினார்.

பிரணாப் முகர்ஜி நியூயார்க்கில் ஞாயிற்றுக் கிழமையன்று பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் நிதி அமைச்சகக் குறிப்பு தொடர்பாக வல்லுநர்களின் கருத்தை பெறபோவதாக கூறினார்.

"மதிப்பிற்குரிய அமைச்சர்",  என்று பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தைக் குறிப்பிட்டார் ஆனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்துப் பேசிய பிறகுதான்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சகக் குறிப்பைப் பற்றி வாயைத் திறக்க முடியும் என்று கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 April 2012, 17.32 தலைப்புச் செய்திகள்
ஏர்செல் நிறுவனம் கைமாறியதில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதாயம் - சுப்ரமணிய சுவாமி தகவல்
புதுதில்லி: ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதில்...மேலும்...
0 Comments , 74 Hits
02 January 2012, 20.24 வணிக செய்திகள்
5 மாநில தேர்தலுக்கு பிறகே பட்ஜெட்: பிரணாப்
புதுதில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட்...மேலும்...
0 Comments , 147 Hits
06 January 2012, 19.41 செய்திகள்
வன்முறை நன்மை பயக்காது என தீவிரவாதிகள் உணர்ந்து விட்டனர்: சிதம்பரம் கருத்து
புதுதில்லி: வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல் இயக்கங்கள்,...மேலும்...
0 Comments , 132 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits