மும்பை: பிரபல இந்தி நடிகை ஹேமமாலினியின் வீட்டில் ரூ.80 லசம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த நேபாள நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 27ம் தேதி, நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஹேமமாலினி சென்றிருந்தார்.
இந்நிலையில், பிப். 28ம் தேதி மும்பையில் இருக்கும் அவரது ‘கோகுல்தம்' பங்களா இல்லத்தில் புகுந்த கொள்ளை காரர்கள், ரூ. 75 லட்சம் மதிப்புள்ள நகைகளையும், ரூ.5 லட்சம் பணத்தையும்
கொள்ளையடித்து விட்டனர்.
நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஹேமமாலினி, தன் வீட்டில் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஹேமமாலினி வீட்டில் கொள்ளையடித்த கொள்ளை காரர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், ஹேமமாலினி வீட்டில் கைவரிசை காட்டிய நேபாளத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாக, மும்பை போலீஸ் இன்று (மார்ச் 8) அறிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



