சென்னை: சிபிஐ அதிகாரிகள் இன்று (அக்.10) காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) சிபிஐ பதிவு செய்துள்ளது.
ஏர்செல் - மேக்ஸிம் ஒப்பந்தம் தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர், சன் டிவி குழுமத்தின் கலாநிதி மாறன் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழு தீவிர சோதனையிட்டு வருகிறது.
புதுதில்லி, சென்னை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல், சன் டிவி நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




