சென்னை: அண்மையில் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டபிள்யூ.ஆர்.வரதராஜனின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டபிள்யூ.ஆர்.வரதராஜன் அண்மையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சில ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில், டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணம் குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “டபிள்யூ.ஆர்.வரதராஜன் நீரில் மூழ்கியே இறந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் விஷம் கலந்திருப்பதற்கான அறிகுறி இல்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசு மருத்துவர் நடத்திய பிரேத பரிசோதனையில் டபிள்யூ.ஆர்.வரதராஜன் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரிகிறது. காவல் துறை நடத்தி வரும் விசாரணையிலும் இது உறுதி செய்யப் பட்டுள்ளது.
டபிள்யூ.ஆர்.வரதராஜன் உடலில் இருந்து பதிவு செய்யப் பட்ட கை ரேகையும், அமெரிக்க விசா பெற அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த கை ரேகையும் ஒத்துப் போகிறதா என ஆய்வு செய்து வருகிறோம்.”
இவ்வாறு காவல் துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



