புதுதில்லி: மகளிர் மசோதாவை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று (மார்ச் 8) ராஜ்ஜியசபாவில் முறைகேடாக நடந்துக் கொண்ட 7 எம்.பி.க்கள், பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று (மார்ச் 8) ராஜ்ஜியசபாவில் அராஜகம் செய்தனர். ராஜ்ஜியசபா சபாநாயகர் ஹமீத் அன்சாரி கையில் இருந்த மசோதா நகலை பிடுங்கி கிழித்து எறிய முற்பட்ட எம்.பி.க்கள், அவர் மேஜையில் இருந்த மைக்கையும் உடைத்து சேதப் படுத்த முயன்றனர்.
இந்நிலையில், சபை மாண்புக்கு எதிராக நடந்துக் கொண்ட 7 எம்.பி.க்களும், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். இதற்கான தீர்மானத்தை மாநிலங்களுக்கான, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகன் இன்று (மார்ச் 9) கொண்டு வந்தார்.
சஸ்பெண்ட் ஆன எம்.பி.க்கள் பட்டியல்:
சுபாஷ் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), சபீர் அலி (லோக் ஜனசக்தி கட்சி), வீர்பால் சிங் யாதவ், நந்த் கிஷோர் யாதவ், அமீர் அலாம் கான் மற்றும் கமல் அக்தர் (நால்வரும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள்), மற்றும் இஜாஸ் அலி (சுயேச்சை எம்.பி).
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



