maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கனிமொழ ஜாமின் வாய்ப்புகள் பிரகாசம்?

கனிமொழ ஜாமின் வாய்ப்புகள் பிரகாசம்?

E-mail Print
Share/Save/Bookmark

Kanimozhiபுதுதில்லி: 2ஜி வழக்கில் சிக்கியுள்ள கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை (நவ.3) வழங்கப்படவுள்ளது. இதனையொட்டி அழகிரி இன்று புதுதில்லி புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலினும் தில்லி புறப்படவுள்ளார்.

கனிமொழியின் ஜாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி புதுதில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகின

ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை நாளைக்கு (நவம்பர் 3ம் தேதிக்கு) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார். அதன்படி நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

இந்நிலையில் கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியது.

சிபிஐ இதற்கு அளித்த விளக்கத்தில், 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று திமுக தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.

இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று (நவ.2)  காலை புதுதில்லி புறப்பட்டுச் சென்றார். அதே போல திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை புதுதில்லி செல்கிறார்.

மேலும் டி.ஆர். பாலு உள்பட அனைத்து திமுக எம்பிக்களும், சில முன்னாள் மாநில அமைச்சர்களும் தில்லி விரைகின்றனர்

இருப்பினும் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமின் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 03 November 2011 14:39 )  


More and More


கிட்டதட்ட

15 May 2012, 18.39 செய்திகள்
திமுகவின் கொ.ப.செ.வாக ராசா நீடிப்பார் : திமுக அறிவிப்பு
புதுதில்லி: திமுக கொள்கை பரப்புச் செயலாளராக ஆ.ராசா நீடிப்பார் என...மேலும்...
0 Comments , 12 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits
06 January 2012, 20.58 செய்திகள்
புயல் நிவாரணம்: அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு - கருணாநிதி பேட்டி
சென்னை: தானே புயல் நிவாரண பணிகளில் அதிமுக தலைமையிலான தமிழக அரசுக்கு...மேலும்...
0 Comments , 143 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits