வாஷிங்டன்: நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு மூன்று மாதங்கள் ஆன பின்பும் அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அறிவிக்கப் பட்டது. அவருக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப் பட வேண்டும். ஆனால், இந்தத் தொகையை ஒபாமா இன்னும் பெற்றுக் கொள்ளவில்லையாம்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், “பரிசுத் தொகையை கொடுக்க சொல்லி ஒபாமா இன்னும் கேட்கவில்லை.” எனக் கூறினார்.
1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கப் போவதாக ஒபாமா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
| < Prev | Next > |
|---|









