maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சந்திரபாபு நாயுடுவை விசாரிக்கிறது சிபிஐ

சந்திரபாபு நாயுடுவை விசாரிக்கிறது சிபிஐ

E-mail Print
Share/Save/Bookmark

chandrababu naiduஐதரபாத்: தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வு துறைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதல்வராக இருந்த போது கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனார்த்தன ரெட்டியின் ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு முறைகேடாக உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். தற்போது உயிருடன் இல்லாத நிலையில், இது குறித்து அவரது மனைவி விஜயாவிடமும், மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடமும், சிபிஐ அண்மையில் விசாரணை நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு தனது தந்தை ஆட்சிக் காலத்தில் உரிமம் வழங்கப் படவில்லையென்றும், 2002-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது உரிமம் வழங்கப் பட்டதாகவும், ஒய்.எஸ்.விஜயாவும், ஜெகன்மோகன் ரெட்டியும் கடந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த மனு இன்று (நவ.14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் சொத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய புலனாய்வு துறைக்கு ஆணையிடப் பட்டது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

17 January 2012, 19.59 தலைப்புச் செய்திகள்
ஆந்திராவில் கடும் குளிர் : 15 பேர் பலி
ஐதரபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த...மேலும்...
0 Comments , 128 Hits
09 January 2012, 21.10 செய்திகள்
அரசியலில் குதிக்கிறார் நடிகர் பாலகிருஷ்ணா
விஜயவாடா: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 2014 ஆந்திர சட்டமன்ற தேர்தலில்...மேலும்...
0 Comments , 140 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits