சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் இன்று (நவ.16) கைது செய்யப் பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சி அமைந்த பின், தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நில அபகரிப்பு செய்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப் பட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக நா.உ. ரித்தீஷ் இன்று (நவ.16) கைது செய்யப் பட்டார்.
திருபெரும்புதூரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலத்தை திமுக நா.உ. ரித்தீஷ் அபகரித்து தில்லியை சேர்ந்த நிறுவனத்திடம் விற்று விட்டதாக காஞ்சிப்புரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த காவல்துறையினர், சாமிக்கண்ணுவின் கையெழுத்தை ரித்தீஷ் போட்டு மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இன்று (நவ.16) காலை மயிலாப்பூரில் ரித்தீஷ் கைது செய்யப் பட்டார். பின்னர், அவரை திருபெரும்பதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேர்நிறுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரித்தீஷை இந்த மாதம் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரித்தீஷ் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




