புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான இன்று (23/11/2011) விலைவாசி உயர்வு குறித்த பிரணாப் முகர்ஜியின் கருத்து பற்றி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார். ஓட்டெடுக்க சொல்லி கேட்கக் கூடாது என்பது இதன் முக்கிய நிபந்தனையாகும்.
நேற்று (22/11/2011) உத்தரப்பிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்கும் கோரிக்கை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காக பாராளுமன்றம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பாரதிய ஜனதா கட்சியும் இடது சாரிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் பாராளுமன்றம் தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் இடதுசாரி தலைவர்களை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசியதன் காரணமாக இன்று விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும் பாராளுமன்றம் செயல்படாமல் இன்றும் முடங்கினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். இதைத் தடுக்க பாராளுமன்றம் இடையூறு இன்றி செயல்படவேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பத்தையும் பரிசீலித்து பாராளுமன்றத்தில் இன்று ஓட்டுமுறை இல்லாமல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





