மும்பை: தீவிரவாதம் நமது நாட்டின் சாபக்கேடு என கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை காவல்துறை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இன்று (மார்ச் 10) பங்கேற்ற அப்துல் கலாம் கூறியதாவது:
“தீவிரவாதம் நாட்டின் சாபக்கேடு. அதை இடையூறாக கருதி, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்தது போல, தீவிரவாதத்தை எதிர்கொள்வதிலும், கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைய வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப் பட வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். ஒவ்வொரு இந்தியனும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.”
இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.
| < Prev | Next > |
|---|









