maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சத்துணவு சாப்பிட்ட 2 பள்ளி மாணவிகள் பலி

சத்துணவு சாப்பிட்ட 2 பள்ளி மாணவிகள் பலி

E-mail Print
Share/Save/Bookmark

midday mealபாட்நா: பீகார் மாநிலம், சீதாமர்கி மாவட்டத்தில், மாநில அரசால் நடத்தப் படும் பள்ளியில், நேற்று (மார்ச் 10) சத்துணவு சாப்பிட்ட 2 மாணவிகள் பலி ஆகியுள்ளனர்.

சங்கீதா என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியும், நீலு என்ற ஒன்றாம் வகுப்பு மாணவியும், நேற்று (மார்ச் 10) பள்ளியில் சத்துணவு சாப்பிட்டுள்ளனர்.

மாலையில் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் போது சோர்வாக காணப் பட்ட அவர்கள், சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் ஹர்சிங்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச் 10 மாலை சேர்க்கப் பட்டனர். சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறக்க, நீலு இன்று (மார்ச் 11) காலை இறந்தார்.

விஷம் கலந்த சத்துணவை உண்டதால்தான் அவர்கள் இறந்ததாக, அவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பள்ளி மாணவிகளின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என சீதாமர்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:32 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits