சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 12ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அடம் பிடித்து வருகிறது. இதனை தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை (டிச.9) அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் கேரள அரசைக் கண்டித்து டிசம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவெடுக்கப் பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட நினைக்காமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றும், தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



