கேப்டவுன்: கற்பழிப்பு நிகழ்வுகளில் இருந்து பெண்கள் தப்பிக்க பல் உடைய பெண்ணுரையை தென் ஆப்ரிக்க மருத்துவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த பெண்ணுரைக்கு ரேப் - ஆக்ஸ் (Rape axe) என பெயரிடப் பட்டுள்ளது.
இது குறித்து இந்த பெண்ணுரையை வடிவமைத்த மருத்துவ பெண்மணியான சானெட் எஹ்லெர்ஸ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியதாவது:
“40 ஆண்டுகளுக்கு முன் கற்பழிக்கப் பட்ட பெண்ணை பார்க்க நேர்ந்தது. ’அங்கு’ மட்டும் பல் எனக்கு இருந்திருந்தால் நான் தப்பித்திருப்பேன் என்றார். அப்போது எனக்கு 20 வயது. அப்போது மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தேன். ’உனக்கு
நேர்ந்த நிகழ்வு வேறு எந்த பெண்ணுக்கும் நேராமல் இருக்கும் படி நான் ஒரு நாள் செய்து காட்டுவேன்’என அவளுக்கு உறுதியளித்தேன். 40 ஆண்டுகளுக்கு பிறகு ரேப் - ஆக்ஸ் பெண்ணுரையை வடிவமைத்துள்ளேன்.
கற்பழிக்க ஒருவன் முயலும் போது பெண்ணுரையில் இருக்கும் பல் போன்ற கொக்கி, அவன் உறுப்பை கவ்விக் கொள்ளும். அந்த கொக்கி கவ்விக் கொண்டால், அதை மருத்துவர்தான் அகற்ற முடியும். கொக்கியை அகற்றும் வரை அவனுக்கு வலி உயிர் போகும். அவனால் ஒரு அடி கூட நடக்க முடியாது. சிறுநீர் கழிக்கவும் முடியாது. அவனே அகற்ற நினைத்தால் மேலும் இறுகிக் கொள்ளும். ஆனால், இந்த கொக்கி அவன் தோலை கிழிக்காது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க வந்திருக்கும் 30,000 பெண்களுக்கு இந்த பெண்ணுரையை வழங்கியுள்ளேன். இதை வடிவமைக்க பொறியாளர்கள், மகப்பேறு மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரின் ஆலோசனையை பெற்றேன். இதை பயன் படுத்துவது (பெண்களுக்கு) முற்றிலும் பாதுகாப்பானதாகும்.” என்றார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



