maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கல்கியின் நூல்கள் பிடிக்கும்: ஜெர்மன் தமிழ் பேராசிரியர் பேச்சு

கல்கியின் நூல்கள் பிடிக்கும்: ஜெர்மன் தமிழ் பேராசிரியர் பேச்சு

E-mail Print
Share/Save/Bookmark

vulrik nickolasகோவை: கோவையில் நடந்து வரும் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ஜெர்மானிய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியை உல்ரிக் நிக்லஸ் (ஜூன் 24) தனக்கு கல்கியில் நூல்களை பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

உல்ரிக் நிக்லஸ் அளித்த பேட்டி:

ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன். அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களை படித்தால் நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால்தான் நான் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், பாண்டிசேரியை சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளேன். ஜெர்மன் எனக்கு பிறந்த வீடு என்றால்,தமிழகம் எனக்கு புகுந்த வீடு.

5 ஆண்டுகளாக நான் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் பாரம்பரியம் மிக்க தொன்மையான மொழி. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை செய்துள்ளேன். கல்கி எழுதிய பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய நூல்களை நான் படித்துள்ளேன்.

மிக சிறு வயதிலேயே சிவாஜி கணேசன் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை நான் பல முறை பார்த்துள்ளேன். அதன் வசனங்கள் எனக்கு பிடிக்கும்.

இவ்வாறு உல்ரிக் நிக்லஸ் கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 57 Hits
06 November 2011, 18.48 சம்பவம்
ஈரோடு அருகே எரிப்பொருள் சரக்குந்தும் பேருந்தும் மோதி விபத்து: 7 பேர் பலி
ஈரோடு: தனியார் பேருந்தும், எரிபொருள் ஏற்றி சென்ற சரக்குந்தும்...மேலும்...
0 Comments , 88 Hits
11 September 2011, 19.49 செய்திகள்
வழக்கறிஞர்கள் திமுகவை காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி பேச்சு
சென்னை: வழக்கறிஞர்கள் தங்கள் வாத திறமையால் திமுகவை காப்பாற்ற...மேலும்...
0 Comments , 112 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits