கோவை: கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று (ஜூன் 25) பங்கேற்க சென்ற தமிழக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநாட்டு மண்டபத்தில் இருக்கும் போதே சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சுதர்சனம் கோவை கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காங்கிரஸின் இரண்டு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த போது சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சுதர்சனத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
அதே போல, செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் அப்துல் ரகுமானுக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





