maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மாவோயிஸ்டு முக்கிய தலைவர் சுட்டுக் கொலை

மாவோயிஸ்டு முக்கிய தலைவர் சுட்டுக் கொலை

E-mail Print
Share/Save/Bookmark

maoistsஐதரபாத்: மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசாத், ஆந்திர போலீஸாரால் இன்று அதிகாலை (ஜூலை 2) சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் இருந்து சில மாவோயிஸ்டுகள் ஆந்திரா வருவதாக மாநில உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டம் முழுவதும் காவல் துறை சோதனை பலப் படுத்தப் பட்டது. நேற்று இரவு (ஜூலை 2) 11 மணியளவில் வாங்கிதி சோதனை சாவடியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மாவோயிஸ்டுகள் பயணம் செய்த வாகனம் அங்கு வந்தது. திடீரென, மாவோயிஸ்டுகள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். காவல் துறையினரும் பதிலுக்கு சுட்டனர். இந்த துப்பாக்கி சூடு நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.

இதில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப் பட்டனர். அதில் ஒருவர்  சிபிஐ (மாவோயிஸ்டு) மத்திய குழுவின் உறுப்பினரும், மாவோயிஸ்டு இயக்கத்தின் செய்தி தொடர்பாளருமான ஆசாத் ஆவார். மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.

இந்த தகவலை ஆந்திர காவல் துறை தெரிவித்துள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 November 2011, 21.20 தலைப்புச் செய்திகள்
சந்திரபாபு நாயுடுவை விசாரிக்கிறது சிபிஐ
ஐதரபாத்: தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து...மேலும்...
0 Comments , 92 Hits
17 January 2012, 19.59 தலைப்புச் செய்திகள்
ஆந்திராவில் கடும் குளிர் : 15 பேர் பலி
ஐதரபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த...மேலும்...
0 Comments , 49 Hits
27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள்
பயண எச்சரிக்கையை திரும்ப பெற ஆஸ்திரேலியாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்...
0 Comments , 95 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits