maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் வண்டி ஓட்டும் போது வானொலியில் விளையாட்டின் நேரடி வர்ணனை கேட்டால் ஆபத்து: ஆய்வில் தகவல்

வண்டி ஓட்டும் போது வானொலியில் விளையாட்டின் நேரடி வர்ணனை கேட்டால் ஆபத்து: ஆய்வில் தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

football

லண்டன்: வாகனம் ஓட்டும் போது வானொலியில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளின் நேரடி வர்ணனையை கேட்பது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை ஆபத்தானதாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, வானொலியில் பாடல்கள் கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது ஆகியவை மிகவும் ஆபத்தான செயலாகும். இவற்றை தவிர்க்கும் படி காவல் துறையும், அரசுகளும் எவ்வளவோ மக்களிடம் வலியுறுத்தினாலும் யாரும் கேட்பதில்லை.

இதனால், பல சமயம் மோசமான சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேர்ந்து விடுகிறது. அதுவும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கால்பந்து போட்டிகள், விம்பிள்டன் டென்னிஸ் போன்ற முக்கியமான விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது அவற்றின் நேரடி வர்ணனையை வானொலியில் கேட்க பலருக்கும் அலாதி ஆர்வம்.

இவ்வாறு வாகனம் ஓட்டி செல்லும் போது விளையாட்டு போட்டிகளின் நேரடி வர்ணனை கேட்பது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானதாகும் என்பது போக்குவரத்து ஆய்வு கூடம் (Transport Research Laboratory) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு 25 வயதில் இருந்து 45 வயது வரை இருக்கும் 18 பேரிடம் (9 ஆண் - 9 பெண்) நடத்தப் பட்டது.

விளையாட்டு போட்டிகளின் நேரடி வர்ணனையை கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நேரடி வர்ணனையை கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவதால், சாலையை வாகன ஓட்டிகள் கவனிப்பதில்லை. இதனால் வண்டி ஓட்டும் போது கடைசி நொடியில்தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர்.

விளையாட்டு போட்டிகளின் பதற்றமான கட்டங்களில், வண்டியை சாலையோரத்தில் பத்திரமாக நிறுத்தி விட்டு, நேரடி வர்ணனையை நிம்மதியாக கேட்டு விட்டு, மீண்டும் பயணத்தை தொடரலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த செய்தியை தி டெலிகிராஃப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.






Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

04 January 2012, 19.11 சம்பவம்
தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4)...மேலும்...
0 Comments , 71 Hits
16 September 2011, 21.52 செய்திகள்
அசாருதீன் இளைய மகன் மரணம்
ஐதரபாத்: இரு சக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில்...மேலும்...
0 Comments , 109 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits