maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தமிழக மீனவர்கள் தாக்குதல்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

தமிழக மீனவர்கள் தாக்குதல்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

E-mail Print
Share/Save/Bookmark

karunanidhiசென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நேற்று (ஜூலை 8) கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகள் விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும், அதற்குப் பிறகு சில நாள்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்த நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும்  முடிவெடுக்கப்பட்டது.

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக் கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திமுக மீனவர் அணி சார்பில், சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் நாளை (ஜூலை 10) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திமுக கேட்டுக் கொண்டுள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 December 2011, 19.32 தலைப்புச் செய்திகள்
முல்லை பெரியாறு: மாநிலம் தழுவிய போராட்டம் - திமுக முடிவு
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 12ம் தேதி...மேலும்...
0 Comments , 88 Hits
11 October 2011, 21.04 தலைப்புச் செய்திகள்
மாறன் சகோதரர்களுக்கு என்றென்றும் ஆதரவு: கருணாநிதி
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு துறையால் நேற்று...மேலும்...
0 Comments , 98 Hits
03 December 2011, 16.16 தலைப்புச் செய்திகள்
கனிமொழி ஜாமீனில் சென்னை திரும்பினார் - கருணாநிதி வரவேற்பு
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு  ஜாமீனில்...மேலும்...
0 Comments , 77 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits